மெக்கா மீது ஏவுகணை தாக்குதல்: முறியடித்தது சவூதி

0
549

rocketஇஸ்லாமியர்களின் புனித நகரான மெக்கா மீது, ஏமனில் ஆதிக்கம் செய்து வரும் ஹவுத்தி போராளிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலை சவூதி ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

சவூதியின் அண்டை நாடான ஏமனில் அரசுக்கு எதிராக போராடி வரும் ஹவுத்தி இன புரட்சிப் படையினரை தோற்கடிக்க, சவூதி அரசு, அந்நாட்டுக்கு உதவி செய்து வருகிறது. இதன் காரணமாகவே சவூதியின் மிக முக்கிய நகரனாக மெக்கா மீது ஹவுத்தி போராளிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனிடையே, மெக்கா மீதான தாக்குதல் முயற்சியை அடுத்து சவூதியின் முக்கிய நகரங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக சவூதி தெரிவித்துள்ளது.