வலுவிழந்தது “கியான்ட் ” புயல் :சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு

0
109

cycloneவங்கக் கடலில் உருவான “கியான்ட்” புயல் நேற்று முன்தினம் வலு இழந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது . இதன் காரணமாக வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், வரும் 30 ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை மைய இயக்குனர், இம்முறை வடகிழக்கு பருவமழை 39 சென்.மீ – 43 சென்.மீ வரை பெய்யக்கூடும் என கூறியுள்ளார்.