கடலில் படகு மூழ்கி 90 பேர் மாயம்

0
71

sea-boatஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக படகில் செல்லும் அகதிகள், ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் லிபியாவிலிருந்து இத்தாலி நேற்று புறப்பட்ட படகில் 100க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.

அப்போது நடுவழியில் படகில் ஓட்டை விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தவேளை உயிர் பிழைப்பதற்காக சிலர், நடுக்கடலில் குதித்தனர். சற்று நேரத்தில் படகு கடலில் மூழ்கியுள்ளது. படகில் பயணித்த 90 போரையும் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.