தாயகத் திருநாள் விவாதங்கள் – பேஸ்புக் பதிவு

0
28

தொலைக்காட்சிகளில் தாயகத் திருநாள் விவாதங்கள் இன்று நடக்கின்றன. இத்தனை ஆண்டுகள் நடக்காத இந்த விவாதம் இந்த ஆண்டு நடைபெறுவது வரவேற்கத்தக்கது தான்.

ஆனால் கொடுமை என்னவெனில் இந்த விவாதத்தில் அழைக்கப்பட்டவர்கள் திராவிடர்கள் என்பது தான். யாரால் இந்த இனம் ஒற்றுமையின்றி வீழ்ந்ததோ அவர்களையே கூட்டிவந்து மொழி வழி மாநிலம் உருவான நாள் குறித்து பேச வைப்பது மற்றுமொரு ஏமாற்று வேலை. இவர்கள் என்ன பேசுவார்கள்? ராமாசாமி தான் தமிழகம் உருவாக காரணமாக இருந்தார் என்று பச்சைப் பொய்யை அவிழ்த்து விடுவார்கள். ராமசாமியின் புராணம் பாடுவதற்கே திராவிடர்களுக்கு நேரம் போதாது. இந்நிலையில் இவர்கள் எப்படி தமிழர்களின் போராட்டங்கள் குறித்தும் அவர்களின் தியாகத்தை பற்றியெல்லாம் பேசுவார்கள்?

நியாயமாக தாயகத் திருநாள் குறித்த விவாதத்தில் தமிழ்த் தேசியர்களை தொலைக்காட்சிகள் நிறுவனங்கள் அழைத்து பேச வேண்டும். அருகோ ஐயா, சீதையின் மைந்தன், அரிமாவளவன், மணியரசன் ஐயா, வியனரசு ஐயா போன்ற தமிழர் நலம் சார்ந்த அறிவர்களை அழைத்து தாயக உரிமைகளை பற்றி கேள்வி கேட்க வேண்டும். இதை விட்டு விட்டு திராவிட இயக்கங்களை கட்சிகளை சேர்ந்தவர்களை அழைத்து வந்து பேசுவது தாயகத்திற்கு செய்யும் பெரும் தீங்காகும் !