தமிழினத்தின், தமிழ்நாட்டின் எதிர்வினை என்ன?

0
36

பாகிசுத்தான் ராணுவம் இந்திய ஒன்றிய ராணுவ வீரர் ஒருவரை சுட்டுக்கொன்றது. அதன்பின் அவர் உடலை துண்டுதுண்டாக வெட்டி வீசியது.

உள்துறை மந்திரி, பாகிசுத்தானுக்கு கடும் பதிலடி கொடுப்போம், இந்திய தலைகுனியாது என்கிறார்.

இன்னொரு மந்திரி பாகிசுத்தான் செய்ததை அப்படியே திரும்ப செய்வோம் என்கிறார்.

இறந்த ராணுவ வீரரின் தந்தை பாகிசுத்தானுக்கு பதிலடி தரவேண்டும் என்கிறார். அவ்வீரரின் மனைவியோ என்னை இந்நிலைக்கு ஆளாக்கியவனை சும்மாவிடக்கூடாது என்கிறார்.

இறுதி மரியாதை கூட்டத்தில் பாகிசுத்தானை பழிக்கு பழி வாங்குவோம் என உறுதிமொழி எடுத்தார்கள்..

மகிழ்ச்சி..

ஆயுதம் தாங்கிய வீரனை கொன்றதற்கே இந்தளவு அவரின் உறவினர்களும், மந்திரிகளும் இந்தியாவும் கொந்தளிக்கிறார்கள், பழிக்கு பழி என்கிறார்கள் என்றால்,

ஆயுதம் தாங்காத நிராயுதபாணி தமிழர்களை, ஒன்றரை லட்சம் பேர்களை, குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கொன்று, தமிழர்களை இன அழிப்பு செய்த ஈழப்படுகொலையை அரங்கேற்றிய ஆரிய பிராமண இந்தியாவுக்கு,
அதற்கு துணைநின்ற திராவிட கங்காணிகளுக்கு,

தமிழினத்தின், தமிழ்நாட்டின் எதிர்வினை என்ன?

வரலாறு பதில் சொல்லும்..