காஷ்மீர் எல்லையில் மேலும் ஒரு இந்திய ராணுவ வீரர் பலி

0
25

காஷ்மீரின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் மேலும் ஒரு இந்திய ராணுவ வீரர் பலியாகியுள்ளார். கடந்த ஒரு மாத காலமாக இரு ராணுவத்தினரிடையே தொடர் தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

அதேபோல், இன்று ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்திய நிலைகள் மீது துப்பாக்கிகளால் சுட்டும் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். அப்போது ஒருவர் பலியானதாகவும், இருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் எல்லை பாதுகாப்புப்படை கூறியுள்ளது.