முதலமைச்சர் வீரபத்ரசிங் மருத்துவமனையில் அனுமதி

0
34

veerabadrasingஇமாச்சல பிரதேச முதலமைச்சர் வீரபத்ரசிங் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் சிம்லாவில் உள்ள ஐஜி மருத்துவமனையில் உடல்நலம் சரியில்லாமல் அனுமதிக்கப் பட்டார். கடும் இருமல் மற்றும் காய்ச்சல் இருந்ததால் அவரை உடனடியாக சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கவர்னர் ஆச்சார்யா தேவ் விராட் இன்று காலை முதலமைச்சரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.