நீதிபதிகளின் போன் அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுகிறது – கெஜ்ரிவால்

0
28

kejriwalமத்திய அரசு நீதிபதிகளின் தொலைபேசி அழைப்புளை ஒட்டுக் கேட்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்த செயல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் மட்டுமன்றி நீதித்துறையின் சுதந்திரத்தில் அத்துமீறும் செயலுமாகும் என கெஜ்ரிவால் தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு வழங்கியுள்ள பரிந்துரைகளை 9 மாதங்களாக அரசு கிடப்பில் போட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார். இதையடுத்து கெஜ்ரிவால் முன்வைக்கும் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுப்பதாக மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.