500, 1000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது: மத்திய அரசு

0
120

இன்று நள்ளிரவு 12 மணி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெறுகிறது. திடீரென அழைத்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரதமர் மோடி இந்த புதிய திட்டத்தை அறிவித்தார். கருப்பு பணத்தை ஒழிக்க இந்த புதிய திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளதாக அவர் கூறினார். மேலும், புதிதாக 2000 ரூபாயும், புதிய வடிவில் 500 ரூபாய் நோட்டும் அறிமுகப்படுத்தப் படுகிறது.

நாளை அனைத்து வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு ஏ.டி.எம்கள் வேலை செய்யாது. அரசு மருத்துவமனைகளிலும், பெட்ரோல் பங்குகளிலும் நவ 11ஆம் தேதி வரை 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லும். நவ 10ஆம் தேதி முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் மாற்றிக் கொள்ளலாம்.