ஜல்லிக்கட்டு நடக்கவில்லை: மதுரை போலீஸ்

0
41

மாட்டுப் பொங்கல் நாளான இன்று பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த செய்திருந்த ஏற்பாடுகளை முறியடித்துவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மதுரை மாவட்டத்தையும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை, என எஸ்.பி விஜயேந்தர் பிடாரி தெரிவித்தார்.

2000 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததாக அவர் கூறினார். நூற்றுக்கணக்கானோர் கூடி, சிவகங்கை மாவட்டத்தின் சிங்கம்புனரி ஊரில் சிறிது நேரம் மஞ்சுவிரட்டு நடந்ததாக கூறப்படுகிறது.

மேலும், மதுரையின் பாலமேடு பகுதியில் காளையை வைத்து பல பூஜைகள் நடந்துள்ளது. அங்கு கருப்பு கொடி காட்டி பலர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். புதுக்கோட்டையின் ஆலங்குடி பகுதியிலும் ஜல்லிக்கட்டு நடத்த முயன்றவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.