தமிழர்களுக்கு கனடா பிரதமர் தமிழில் பொங்கல் நல்வாழ்த்து

0
22

உலகம் முழுவதும் தமிழர்கள் பொங்கல் திருநாளைக் கொண்டாடி வருகிறார்கள். அதையொட்டி, கனடா பிரதமர் Justin Trudeau கனடா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளார்.

ட்விட்டரில் அவர் வெளியிட்டு உள்ள வீடியோவில் தமிழில் வணக்கம் தெரிவித்து உரையைத் தொடங்குகிறார். அதில், கனடா மற்றும் ஆங்கில மொழிகளில் பேசும் அவர், கனடாவின் வளர்ச்சியில் தமிழர்கள் பங்கு மிக முக்கியமானது என்றும், தமிழர்கள் அனைவருக்கும் தை பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்வதாகவும், ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தைத் தமிழ் கலாச்சார மாதமாக கனடா கொண்டாடும் என்றும் பேசினார். அவருடைய பொங்கல் வாழ்த்துச் செய்திக்கு பல்வேறு தரப்பினரும் நன்றியைத் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.