உ.பி டிவிஸ்ட்: மகனுக்கு எதிராக போட்டியிடுகிறார் முலாயம்

0
26
Uttar Pradesh Chief Minister Akhilesh Yadav. (File Photo: IANS)

வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உ.பி சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், தன் மகனும் முதல்வருமான அகிலேஷ் யாதவை எதிர்த்து போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையே இருந்த விரிசலை சரி செய்ய முலாயம் முயற்சி செய்து வந்த நிலையில், அகிலேஷ் தன்னை கண்டுகொள்ளவே இல்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

“பா.ஜ கட்சியுடன் சேர்ந்து சமாஜ்வாடி கட்சியை இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சியாக அகிலேஷ் மாற்றி வருகிறார். அதை நான் அனுமதிக்க மாட்டேன்,” என்றார் முலாயம். மேலும், இந்த பிரிவிற்கு தனது சகோதரர் ராம்கோபால் யாதவ் தான் காரணம் என்றும் அவர் கூறினார்.

சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னத்தை கைப்பற்ற இருவரும் தேர்தல் கமிஷனிடம் முறையிட்டு வந்த நிலையில், சமரச பேச்சுவார்த்தை சரிந்துள்ளது. இது மிகவும் வருந்தத்தக்க ஒரு முடிவு. ஆனால், பிரிவினை வாத சக்திகளை உத்தர பிரதேசத்தினுள் முலாயம் வரவிட மாட்டார், என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

சைக்கிள் சின்னத்தை யாருக்கும் கொடுக்காமல் தேர்தலில் கமிஷன் இந்த தேர்தலில் நிறுத்தி வைக்கவுள்ளளதாக எதிர்பார்க்கப் படுகிறது.