காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

0
53

அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாஹல்காம் நகர் பகுதியில் அவோரா எனும் கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

காஷ்மீர் மாநில தீவிரவாத ஒழிப்பு சிறப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் கூட்டாக சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை நேற்று மாலை சுற்றி வளைத்தனர். இதையடுத்து, பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி சுட, பதில் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.

துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து மூன்று AK47 ரக துப்பாக்கிகளை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் எனும் சந்தேகத்தின்பேரில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.